சித்தூரில் அரசுப் பேருந்து-லாரி நேருக்கு நேர் மோதல்: 8 பேர் பலி

சித்தூரில் அரசுப் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 8 பேர் பலியானார்கள்.

ஆந்திர மாநிலம், சித்தூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தும், லாரியும் வெள்ளிக்கிழமை பிற்பகல் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

உடனடியாக அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

“நூறாண்டு ஆனாலும் பாஜக வருந்தும்”- அன்னபூர்ணா விவகாரத்தில் ஜெயக்குமார் கண்டனம்

விபத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பலர் படுகாயம் அடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விபத்து தொடர்பாக காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் மோடி!

அரிய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

ம.நீ.ம. தலைவராக மீண்டும் கமல்ஹாசன்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து