சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்; ஜன்னிக் சின்னெர் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

நாளை நடைபெறும் இறுதிஆட்டத்தில் சின்னெர், அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபோ உடன் மோத உள்ளார்.

சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரர்களான இத்தாலியின் ஜன்னிக் சின்னெர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் ஆகியோர் மோதினர்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 7-6 (11-9) என்ற புள்ளிக்கணக்கில் ஜன்னிக் சின்னெரும், 2வது செட்டை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் அலெக்சாண்டர் ஸ்வெரெவும் கைப்பற்றினர். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட்டில் அனல் பறந்தது. இரு வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை எடுத்தனர்.

இறுதியில் இந்த செட்டில் 7-6 (7-4) என்ற புள்ளிக்கணக்கில் ஸ்வெரெவை வீழ்த்தி ஜன்னிக் சின்னெர் வெற்றி பெற்றார். இறுதியில் 7-6 (11-9), 5-7, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ஸ்வெரெவை வீழ்த்தி ஜன்னிக் சின்னெர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் இறுதிஆட்டத்தில் சின்னெர், அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபோ உடன் மோத உள்ளார்.

Related posts

இந்தியா-நியூசிலாந்து இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

புரோ கபடி லீக்: பாட்னா பைரேட்ஸ், யு மும்பா அணிகள் வெற்றி

டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய மண்ணில் வரலாறு படைத்த நியூசிலாந்து