சின்னசாமி மைதானத்தில் மழை..! நாளைய டெஸ்ட் போட்டி நடைபெறுமா?

நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி நாளை (அக்.16) சின்னசாமி மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தொடரில் ஜஸ்பிரீத் பும்ரா இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய வானிலை ஆய்வு மையம் பெங்களூரில் இன்னும் சில நாள்களுக்கு அதி கனமழை பெய்யுமென அறிவித்துள்ளது. இதனால் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை 11 மணிக்கு இந்திய அணி பயிற்சி மேற்கொள்ளவிருந்தது. ஆனால், மழையின் காரணமாக இந்த பயிற்சி ரத்து செய்யப்பட்டது.

அக்.16, அக்.17 இரண்டு நாள்களில் 70 -90 சதவிகிதம் மழை வருமென கணிக்கப்பட்டுள்ளது. 3ஆம் நாளில் மழை நிற்குமென கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: துணை கேப்டனாக பும்ரா..! சரியான தேர்வா? ரோஹித் சர்மா கூறியதென்ன?

மேலும், சின்னசாமி மைதானத்தில் மழை நீரை வெளியேற்றும் சிறந்த வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளதால் 3ஆம் நாள் போட்டி தொடங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் அவரது மகனுடன்.

நியூசிலாந்து அணி இலங்கை உடன் 0-2 என மோசமாக தோல்வியுற்றது. அதனால் டிம் சௌதி கேப்டன் பொறுப்பில் இருந்து ராஜிநாமா செய்தார்.

இதற்கடுத்து டாம் லாதம் நியூசிலாந்தின் புதிய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது