சிபிஆர் மூலம் பயணி உயிரைக் காப்பாற்றிய சிஐஎஸ்எஃப் வீரர்! வைரல் வீடியோ

சிபிஆர் மூலம் பயணி உயிரைக் காப்பாற்றிய சிஐஎஸ்எஃப் வீரர்! வைரல் வீடியோ

டெல்லியின் ஐஜிஐ விமான நிலையத்தில், திடீர் மாரடைப்பு காரணமாக மயங்கி விழுந்த ஒரு பயணிக்கு CPR சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றினர். இதனையடுத்து இப்போது அவர் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் நலமாக இருக்கிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஸ்ரீநகருக்குச் செல்லும் விமானத்திற்குத் தயாராக இருந்த ஒரு பயணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மயங்கி கீழே விழுந்தார். இதனையடுத்து மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) வீரர்கள் சரியான நேரத்தில் சிபிஆர் சிகிச்சை மூலம் பயணியின் உயிரைக் காப்பாற்றினர்.

விளம்பரம்

விமான நிலையத்தில் உள்ள சிசிடிவியில் இந்த வீடியோ பதிவானது. அந்த வீடியோவில், அர்ஷித் அயூப் என்பவர் தனது லக்கேஜை டிராலியில் தள்ளிக் கொண்டு செல்வதை காட்டுகிறது, அப்போது அவர் திடீரென தரையில் சரிந்து விழுந்தார். இருப்பினும், அர்ஷித்தின் அதிர்ஷ்டம் காரணமாக, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த சிஐஎஸ்எஃப் வீரர்கள் அவருக்கு உதவ விரைந்தனர், அவர்களின் இந்த விரைவான செயலானது அவரது உயிரைக் காப்பாற்றியது.

விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த CISF வீரர்களில் ஒருவர், அர்ஷித் மயங்கி விழுந்ததை கண்டு அந்த பயணிக்கு, திடீர் மாரடைப்பு ஏற்படும்போது உடனடியாக இதயத்துடிப்பை மீண்டும் செயல்படத் தூண்டும் CPR சிகிச்சையை செய்தார். இதனையடுத்து இன்னொரு CISF வீரரும் உயிர்காக்கும் முயற்சியில் ஈடுபட்டார். பின்னர், அந்தப் பயணியின் உயிர் காப்பாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அந்தப் பயணி கொண்டு செல்லப்பட்டார்.

விளம்பரம்

சிஐஎஸ்எஃப் அறிக்கையின்படி, அர்ஷித் இப்போது நலமாக இருக்கிறார் என்று கூறியுள்ளனர். சமீபத்தில் டெல்லியில் உள்ள ஐஜிஐ விமான நிலையத்தின் டெர்மினல் 2-ல் இருந்து ஸ்ரீநகருக்கு விமானத்தில் ஏறத் தயாராகிக் கொண்டிருந்தபோது, அர்ஷித் அயூப் என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக சரிந்து கீழே விழுந்தார் என்றும் சிஐஎஸ்எஃப் கூறியுள்ளது. இதனையடுத்து மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினர் சிபிஆர் மூலம் அவரது உயிரைக் காப்பாற்றினர்.

உயிரை காப்பாற்றிய பிறகு அவர், டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், இதனையடுத்து அவர் தற்போது நலமாக இருப்பதாகவும் சிஐஎஸ்எஃப் கூறியுள்ளனர். சிபிஆர் என்பது சுவாசம் மற்றும் இதயத் துடிப்பு நிறுத்தப்பட்ட நபர்களை உயிர்ப்பிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான அவசரச் செயல்முறையாகும். இது இரத்த ஓட்டத்தை பராமரிக்க மார்பு அழுத்தங்களை உள்ளடக்கியது மற்றும் நுரையீரலுக்கு ஆக்ஸிஜனை வழங்க சுவாசத்தை மீட்டெடுக்கிறது.

விளம்பரம்

இந்த விடியோவானது இணையதளத்தில் வைரலாகி, நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் பதிவிற்கு வரும் கருத்துக்கள் பாராட்டுக்களால் நிரம்பி வழிகின்றன. அதில் ஒரு யூசர் கூறியதாவது, சிபிஆர் சிகிச்சையை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கற்பிக்கப்பட வேண்டும். தேவைப்படும்போது இது ஒரு பெரிய விஷயமாக இருக்கும் என்று ஒரு யூசர் கருத்து தெரிவித்தார்.

Also Read |
ஏர் ஹோஸ்டஸ் சம்பளம்: விமானப் பணிப்பெண்ணின் 1 மாத சேலரி எவ்வளவு தெரியுமா?

இரண்டாவது யூசர் கூறியதாவது, சிறந்த வேலை. CPR சிகிச்சையை கல்வி நிறுவனங்கள், அலுவலகம், தொழிற்சாலை அல்லது அணைத்து துறைகளில் பணிபுரியும் அனைத்து இளைஞர்களுக்கும் கற்பிக்கப்பட வேண்டும். மேலும் அரசு ஊழியருக்கு கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். மூன்றாவது யூசர் கூறியதாவது, சிஐஎஸ்எஃப் வீரர்களின் நல்ல வேலை. கடவுள் அவர்களை ஆசீர்வதிப்பாராக என்று கூறியுள்ளனர்.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
delhi
,
Viral Video

Related posts

Mumbai: Carpenter Booked For Not Returning ₹22 Lakh Mistakenly Transferred By NRI

Indian Railways Set To Operate Over 6,000 Special Trains For Upcoming Festive Season, From October 1 to November 30; Check Details Inside

Mumbai Shocker: Running Coaching Centre, 3 Brothers For Sexually Assaulting On Teen Student