சிபிஐ விசாரணை காவலில் எடுக்கப்படுவாரா அரவிந்த் கெஜ்ரிவால் ?!

சிபிஐ விசாரணை காவலில் எடுக்கப்படுவாரா அரவிந்த் கெஜ்ரிவால்?!

அரவிந்த் கெஜ்ரிவால் – திகார் சிறை

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.

டெல்லியில் மதுபான கொள்கையை வகுத்ததில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், கடந்த மார்ச் 21-ஆம் தேதி அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். தேர்தல் பரப்புரைக்காக இடைக்கால ஜாமினில் வெளியே வந்த இவர், கடந்த 2 ஆம் தேதி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த வாரத்தில் ஜாமின் வழங்கியது. ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து, அமலாக்கத்துறை தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் உடனடியாக மேல் முறையீடு செய்யப்பட்டது.

விளம்பரம்

அதனை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்துசெய்து உத்தரவிட்டது.

அகழாய்வில் கிடைத்த பொக்கிஷம்… வெம்பக்கோட்டையில் நடந்த அதிசயம்.!
மேலும் செய்திகள்…

இந்த நிலையில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, விசாரணை நீதிமன்றத்தில் கெஜ்ரிவாலை இன்று ஆஜர்படுத்த அனுமதி பெற்றுள்ளனர். இதன்படி, கெஜ்ரிவாலை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Arvind Kejriwal
,
CBI
,
Court
,
delhi

Related posts

விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் புதிய மாற்றம் – டி.என்.பி.எஸ்.சி. முடிவு

திரைக்கதிர்

அவல் லாடு