சிம்புவின் புதிய படம் குறித்து இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து வெளியிட்ட பதிவு!

சிம்புவின் 49-வது படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க உள்ளார்.

சென்னை,

இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து கடந்த 2020ம் ஆண்டு அசோக் செல்வன், வாணி போஜன், ரித்திகா சிங் ஆகியோரின் நடிப்பில் 'ஓ மை கடவுளே' எனும் திரைப்படத்தை இயக்கிதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். அதைத் தொடர்ந்து இவர், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டிராகன் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படமானது அடுத்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் 48-வது படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தினை தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், இன்னும் படப்பிடிப்பு துவங்கவில்லை. இதற்கிடையே, இயக்குனர் மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் 'தக் லைப்' படத்தில் சிம்பு இணைந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் முடிவடைந்தது.

இதற்கிடையில் அஸ்வத் மாரிமுத்து, சிம்பு நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக தகவல் பரவி வந்தன. அதன்படி சமீபத்தில் அஸ்வத் மாரிமுத்து, சிம்பு கூட்டணியில் புதிய படம் உருவாகப் போவதாக படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் போஸ்டர் ஒன்றின் மூலம் அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டது. இது சிம்புவின் 49-வது படமாகும். அதைத்தொடர்ந்து சிம்புவின் அடுத்த படத்தில் அனிருத் இசையமைக்கப் போகிறார் என்றும் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்றும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பல தகவல்கள் உலா வருகின்றன.

இது தொடர்பாக அஸ்வத் மாரி முத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் என்னுடைய வணக்கம். சிம்புவின் அடுத்த படத்தில் தயாரிப்பு நிறுவனத்தையும் என்னையும் தவிர வேறு எதுவும் முடிவு செய்யப்படவில்லை. அப்படி நாங்கள் வேறு எதையும் முடிவு செய்தால் அந்த தகவலை உங்களுடன் தான் முதலில் பகிர்வோம். எனவே நீங்கள் ஒருபோதும் ஏமாறக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

Hello friends and str fans ! Except STR , production and myself nothing else is finalised ! If anything we finalise we ll be the first one to share the news with u 🙂 but we are HEARING you u ll never be disappointed

— Ashwath Marimuthu (@Dir_Ashwath) October 24, 2024

எனவே இந்த பதிவின் மூலம் சிம்புவின் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் கதாநாயகி குறித்த தகவல் உண்மை இல்லை என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் படக்குழுவினர் சார்பில் விரைவில் மற்ற அப்டேட்டுகள் வெளியிடப்படும் என்று நம்பப்படுகிறது.

Related posts

‘Jaldi Khelo Mujhe London Nikalna Hai’: Fans Troll Virat Kohli & Team India With Hilarious Memes After Batting Collapse Against New Zealand In Pune

Indore Commodities Buzz Of October 25: Price Of Gold, Silver And Pulses– All You Need To Know

MSRDC Awards ₹4,700 Crore LOA To RSIIL For Pune Ring Road & Jalna-Nanded Expressway Projects