சிம்புவின் புதிய பட மேக்கிங் விடியோ!

சிம்புவின் 49-வது படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்களைத் தொடர்ந்து, கமல்ஹாசன் தயாரிப்பில் 48-வது படத்தில் நடிகர் சிம்பு நடிக்க உள்ளதாகவும், தேசிங்கு பெரியசாமி இப்படத்தை இயக்கவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது.

தொடர்ந்து, சிம்பு – 48 படத்தின் தயாரிப்பிலிருந்து கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் விலகியுள்ளதாகவும், இப்படத்தை சிம்புவே தயாரிக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: வெளியானது அமரன் படத்தின் உயிரே பாடல்!

View this post on Instagram

A post shared by AGS Entertainment (@agsentertainment)

இதனிடையே, இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அவரது 49-வது படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த நிலையில், சிம்பு – 49 படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் எடுத்த மேக்கிங் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது, இந்த விடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Related posts

Bureau Of Civil Aviation Security (BCAS) Grants Exemption To Sabarimala Pilgrims, Allowing Them To Carry Coconuts On Flights For Temple Rituals During Mandala Season

தாம்பரம் – நாகர்கோவில், மங்களூரு ரயில்கள் தாமதமாகப் புறப்படும்!

தீபாவளி: அரசுப் பேருந்துகளில் 1.50 லட்சம் பேர் பயணம்!