சிரஞ்சீவி வீட்டுக்கு சென்ற பவன் கல்யாணுக்கு இன்ப அதிர்ச்சி

சிரஞ்சீவி வீட்டுக்கு சென்ற பவன் கல்யாண்… இன்ப அதிர்ச்சி கொடுத்த குடும்பத்தினர் – வைரல் வீடியோ!

சிரஞ்சீவி

ஆந்திர சட்டப்பேரவையில் வெற்றி பெற்ற நடிகர் பவன் கல்யாண், தனது மூத்த சகோதரர் சிரஞ்சீவி வீட்டுக்கு குடும்பத்துடன் சென்று ஆசி பெற்றார்.

பிரஜா ராஜ்ஜியம் என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை துவக்கிய நடிகர் சிரஞ்சீவி பின்னர் அந்த கட்சியை காங்கிரஸில் இணைத்தோடு அரசியலில் இருந்தும் விலகினார். அதேநேரத்தில் அவருடைய சகோதரரான பவன் கல்யாண், ஜனசேனா என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை துவக்கி நடத்தி வருகிறார்.

மக்களவைத் தேர்தலோடு, ஆந்திராவில் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்ற நிலையில், தெலுங்கு தேசம் மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்த பவன் கல்யாண் 21 சட்டப்பேரவை மற்றும் இரு மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றார்.

விளம்பரம்

பித்தாபுரம் தொகுதியில் போட்டியிட்ட பவன் கல்யாண், 70 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிலையில் நேற்று ஹைதராபாத்தில் உள்ள தன்னுடைய அண்ணன் சிரஞ்சீவி வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றார். அங்கு மலர்கள், வண்ண காகிதங்கள் ஆகியவற்றை தூவி பவன் கல்யானுக்கு பிரம்மாண்ட வரவற்பு அளிக்கப்பட்டது.

Iam Not Crying..
You Are only Crying 😭
The Bonding Of this Family ❣️#PawanKalyan#Chiranjeevipic.twitter.com/nxDItoAt4R

— D P V E U (@DPVEU_) June 6, 2024

விளம்பரம்

அதன்பின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற தம்பி பவன் கல்யாணுக்கு அண்ணன் சிரஞ்சீவி ஆளுயர மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Andhra Pradesh
,
Pawan Kalyan

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்