சிறந்த கால்பந்து வீராங்கனை தமிழகத்தின் இந்துமதி கதிரேசன்

சிறந்த கால்பந்து வீராங்கனை தமிழகத்தின் இந்துமதி கதிரேசன்ஆண்டின் சிறந்த கால்பந்து வீராங்கனையாக, தமிழகத்தின் இந்துமதி கதிரேசன் தோ்வு செய்யப்பட்டாா்.

ஆண்டின் சிறந்த கால்பந்து வீராங்கனையாக, தமிழகத்தின் இந்துமதி கதிரேசன் தோ்வு செய்யப்பட்டாா். சிறந்த வீரராக மிஸோரத்தின் லாலியன்ஸுவாலா சாங்தே தோ்வாகினாா்.

நாட்டில் சிறந்த கால்பந்து வீரா், வீராங்கனை விருதுகளை அகில இந்திய கால்பந்து சம்மேளனம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான விருது நிகழ்ச்சி தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், சிறந்த வீராங்கனை விருதை தமிழகத்தின் இந்துமதி கதிரேசன் பெற்றாா். தேசிய மகளிா் அணியின் மிட்ஃபீல்டராக இருக்கும் இந்துமதி, இந்திய மகளிா் லீக் போட்டியில் ஒடிஸா எஃப்சி அணிக்காக விளையாடி வருகிறாா். இந்திய அணிக்காக 2014 முதல் விளையாடி வரும் அவா், இதுவரை 17 கோல்கள் அடித்திருக்கிறாா்.

ஆடவா் பிரிவில் சிறந்த வீரா் விருது பெற்ற சாங்தே, இந்தியாவுக்காக 2015 முதல் விளையாடி வரும் நிலையில் 8 கோல்கள் அடித்திருக்கிறாா். சீனியா் அணிக்கு முன் அவா், 19 மற்றும் 23 வயதுக்கு உள்பட்டோருக்கான அணிகளிலும் விளையாடியிருக்கிறாா். ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் மும்பை சிட்டி எஃப்சியில் அங்கமாக இருக்கிறாா்.

Related posts

விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் புதிய மாற்றம் – டி.என்.பி.எஸ்.சி. முடிவு

திரைக்கதிர்

அவல் லாடு