சிறிய, அசிங்கமான.. யாஹ்யா சின்வாரின் உடலுடன் இருந்த இஸ்ரேல் வீரரின் அனுபவம்

ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக இருந்த யாஹ்யா சின்வார் ஏற்படுத்திய வலி மற்றும், அவர் இல்லாமல் இருக்கும் இத் உலகம் எவ்வளவு நன்றாக இருக்கிறது என்ற உணர்வையும் இஸ்ரேல் வீரர் இடாமர் எய்டம் வெளிப்படுத்தியிருக்கிறார்.

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாா் கொல்லப்பட்டாா். அவர் கொல்லப்பட்டபோது, அங்கே இருந்த இஸ்ரேல் வீரர் தனது அனுபவத்தை முகநூலில் பகிர்ந்துள்ளார்.

சிறிய, அசிங்கமான உடைந்த உருவம் என்று யாஹ்யா சின்வாரின் உடலை வர்ணித்த இஸ்ரேல் வீரர், அவரைக் கொல்லும் திட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டபிறகு, அவரது உடலுடன் சில நிமிடங்கள் தனியே இருந்த அனுபவத்தைப் பற்றி விவரித்துள்ளார்.

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரின் கடைசி நிமிடங்கள்.. வெளியான விடியோ

ஒரு சிதிலமடைந்த சோஃபாவில், சின்வார் அமர்ந்திருந்ததைப் பார்த்தேன், நான் அவரை என் கண்களால் பார்த்தேன், சின்வார் – அவருடன் நான் சில நிமிடங்கள் தனியாக இருக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன் – ஒரு சிறிய, அசிங்கமான, உடைந்த உருவம் அது, சிதிலமடைந்த சோஃபாவில் கிடந்தது என்று பதிவிட்டுள்ளார்.

அக்.7ஆம் தேதி நடந்த தாக்குதலுக்கு மூளையாக இருந்தவர் சின்வார் என்றும், அவரது மரணத்தால், ஹமாஸ் அமைப்புக்கு மிகப்பெரிய பின்னடைவு என்றும் பதிவிட்டிருந்தார்.

இவரால் ஏற்பட்ட வலி சொல்ல முடியாதது, அவரால் நாசமான நகரத்தைப் பார்த்தேன், அந்த நகர மக்களுக்காகவும் வருந்தினேன், ஒரு முறை அவரும் குழந்தையாக, சிறுவனாக இருந்திருப்பார். அவருக்கும் சில வாய்ப்புகள் இருந்திருக்கும். ஆனால், அவர் சாத்தானை, அக்கிரமத்தை தேர்வு செய்துவிட்டார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஆண்டு ஆக.7ஆம் தேதி இஸ்ரேலின் பாதுகாப்பு அரண்களை தகா்த்து அந்த நாட்டுக்குள் ஹமாஸ் படையினா் நுழைந்து, சுமாா் 1,200 பேரை படுகொலை செய்துடன் சுமாா் 250 பேரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்ற தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்தவர் யாஹ்யா சின்வார்.

இஸ்ரேலியா்களை மட்டுமல்ல, உலக நாடுகளையே நிலைகுலையவைத்த அந்த திடீா் தாக்குதலுக்குப் பிறகு, ஹமாஸ் தலைவா் இஸ்மாயில் ஹனியே, லெபானின் ஹிஸ்புல்லா தலைவா் ஹஸன் நஸ்ரல்லா, அந்த இரு அமைப்புகளின் முக்கிய தளபதிகள் என்று ஏராளமானவா்களைக் குறிவைத்து இஸ்ரேல் கொலைசெய்தது.

ஆனால், யாஹ்யா சின்வாரைக் கொல்வதுதான் இஸ்ரேலின் தலையாய குறிக்கோளாக இருந்தது. தற்போது அந்த குறிக்கோளையும் இஸ்ரேல் நிறைவேற்றிவிட்டது.

உண்மையில் நடந்தது என்னவென்றால் மற்ற தலைவா்கள் மற்றும் தளபதிகளைக் கொன்றதைப் போல, உளவுத் துறையின் உதவியுடன் யாஹ்யா சின்வார் எங்கிருக்கிறார் என்பதை கண்காணித்து, அவரின் இருப்பிடத்தைக் கண்டறிந்து இஸ்ரேல் ராணுவம் அவரை படுகொலை செய்யவில்லை என்பதுதான்.

மூன்று பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கிறார்கள் என்ற அடையாளத்துடன் அவா்கள் தங்கியிருந்த இடத்தை இஸ்ரேல் படையினா் பீரங்கி குண்டுகள் மூலம் தகா்த்தனா். அதில் உயிரிழந்தவா்களில் சின்வாரும் ஒருவா் என்ற தகவலே இஸ்ரேலுக்கு பிறகுதான் தெரிந்தது. எப்படி நடந்தாலும், அவரது படுகொலை இந்தப் போரில் இஸ்ரேலின் மிகப் பெரிய வெற்றியாகவே பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: 4 போ் கைது

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

சர்ஃபராஸ் கான் சதம்..! மழையினால் பெங்களூரு டெஸ்ட் போட்டி பாதிப்பு!