சிறுமியை கடத்திச்சென்று திருமணம்: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர், புலியூர் சித்தன் என்ற பிரகாஷ் (வயது 24). இவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு 15 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்தார். பின்பு சிறுமியை அடித்து சித்ரவதை செய்து வந்துள்ளார்.

இதுகுறித்த புகாரில், ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசார் பிரகாசை கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா விரைவு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பகவதி அம்மாள், பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிரகாசுக்கு மொத்தம் 51 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். ஆனால், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதால், அதிகபட்ச சிறை தண்டனையான 20 ஆண்டுகள் சிறையை அவர் அனுபவிக்க வேண்டும். மேலும் அவருக்கு, ரூ.34 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.

Related posts

38% அதிகரித்த ஆடம்பர வீடுகள் விற்பனை

மகாராஷ்டிர பேரவைத் தோ்தல்: 10 தொகுதிகளில் விசிக போட்டி

இரவு நேரத்தில் விசாரணைக்கு அழைக்கக் கூடாது: அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை அறிவுறுத்தல்