‘சிறு, குறு தொழில்களில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வர வேண்டும்’ – ப.சிதம்பரம்

'சிறு, குறு தொழில்களில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வர வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கோவை,

கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ஜவுளித்துறையில் 25 ஆண்டுகளாக தொழில்நுட்ப வளர்ச்சி இல்லை என குறிப்பிட்டார்.

மேலும் காங்கிரஸ் ஆட்சியின்போது 8 சதவீதமாக இருந்த சுங்க வரி தற்போது 13 சதவீதம் அதிகரித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். சிறு, குறு தொழில்களில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வர வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், சிறு, குறு தொழில்களில் தொழில்நுட்பத்தை வளர்க்காமல் ஏற்றுமதியில் சாதிக்க முடியாது என்று தெரிவித்தார்.

Related posts

லடாக் ஆதரவாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை: உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்!

பெண் காவலருக்கு பாலியல் வன்கொடுமை!

ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆதிக்கம்: போன்பேவில் 60% ஊழியர்கள் பணிநீக்கம்!