சிறு தொழில் தொடங்க ஊராட்சியிடம் அனுமதி: தமிழக பாஜக எதிர்ப்பு

சிறு தொழில் தொடங்க ஊராட்சியிடம் அனுமதி: தமிழக பாஜக எதிர்ப்பு

சென்னை: தமிழக பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன் வெளியிட்ட அறிக்கை:

சிறு தொழில் பதிவுகளை ஒற்றைச்சாளர முறையில் ஒரே நேரத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவதற்கு வழிவகை செய்ய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வழங்கி இருக்கிறது.

இந்நிலையில், சிறு தொழில் தொடங்குவதற்கு ஊராட்சியில் அனுமதி பெறுவதை கட்டாயமாக்க தமிழக அரசு திட்டமிட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது.

மின்கட்டணம், சொத்து வரி, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு,தொழில் தொடங்க உரிமக் கட்டணம் உயர்வு என பல்வேறு காரணங்களால் சிறு, குறுந்தொழில் செய்பவர்களும் தற்போதுசிரமத்துக்கும், நஷ்டத்துக்கும்ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அதுபோன்ற திட்டத்தை வகுத்திருந்தால் அதைஉடனடியாகக் கைவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related posts

கோடியக்கரை அருகே கடலில் தவறி விழுந்த தரங்கம்பாடி மீனவர் மாயம்

“நீர்நிலைகளை தனியாருக்கு தாரைவார்ப்பதா?” – தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம் 

நடிகர் விஜய்யை அதிமுகவினர் யாரும் விமர்சிக்க வேண்டாம்: நிர்வாகிகளுக்கு பழனிசாமி அறிவுறுத்தியதாக தகவல்