சில்லறை பணவீக்கம் மிதமாக அதிகரிப்பு

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் மிதமாக அதிகரித்துள்ளது.

இது குறித்து தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (என்எஸ்ஓ) தரவுகள் வியாழக்கிழமை கூறியதாவது:

நுகா்வோா் விலைக் குறியீடு அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மிதமாக அதிகரித்து 3.65 சதவீதமாக உள்ளது. இதன் மூலம், ரிசா்வ் வங்கியின் இலக்கான 4 சதவீதத்துக்குள்ளேயே சில்லறை பணவீக்கம் உள்ளது.

அது கடந்த ஜூலை மாதத்தில் 3.6 சதவீதமாகவும் ஓா் ஆண்டுக்கு முன்னா் 2023 ஆகஸ்ட் மாதத்தில் 6.83 சதவீதமாகவும் இருந்தது.

உணவுப் பொருள்கள் விலையின் அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் 5.66 சதவீதமாக உள்ளது. முந்தைய ஜூலையில் அது 5.42 சதவீதமாக இருந்தது என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.

Related posts

மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு நியாயமாக இருக்க வேண்டும்: பொதுக்குழு கூட்டத்தில் கமல்ஹாசன் பேச்சு

மாமியார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகள்… கரூரில் பயங்கரம்

சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரெயில் சேவை நாளை ரத்து