சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் சஞ்சய் தத்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் எஸ்.கே.23 திரைப்படத்தில் வில்லனாக நடிகர் சஞ்சய் தத் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

தமிழ் திரையுலகின் தற்போதைய வசூல் நாயகனாக விளங்கும் சிவகார்த்திகேயன், 'மெரினா' படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து, பல வெற்றிப் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகன் என்கிற நிலைக்கு உயர்ந்துள்ளார். தற்போது, அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் சண்டைக்காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இப்படப்பிடிப்பில் நடிகர் சஞ்சய் தத் கலந்துகொண்டு ஆக்சன் காட்சிகளில் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், எஸ்கே – 23 படத்தின் வில்லன் சஞ்சய் தத் என்பது உறுதியாகியுள்ளது.

எஸ்.கே.23 திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக வித்யூத் ஜமால் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு மாஸ் வில்லனாக நடிகர் சஞ்சய் தத் இணைந்திருக்கிறார். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தென்னிந்திய மொழிப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இறுதியாக, தமிழில் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து கவனம் பெற்றார். தற்போது, சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்திருப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

எஸ்.கே.23 திரைப்படத்தை இயக்கி முடித்த கையோடு பாலிவுட்டுக்கு செல்ல உள்ள இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், அங்கு சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்கிற திரைப்படத்தை இயக்க உள்ளார். அதில் ராஷ்மிகா மந்தனா, கரீனா கபூர் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்க, சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

Original Article

Related posts

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வேட்டையன்: பகத் பாசிலின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு

எமர்ஜென்சி ரிலீஸ்: தணிக்கை வாரியத்துக்கு கெடு விதித்த மும்பை உயர்நீதிமன்றம்!