சிவாஜி சிலை உடைந்த விவகாரம்: தலைமறைவான சிற்பி கைது

சத்ரபதி சிவாஜி சிலை உடைந்த விவகாரம்: தலைமறைவான சிற்பி அதிரடி கைது

மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி சிலை உடைந்த சம்பவத்தில், சிலையை வடித்த சிற்பி ஜெய்தீப் ஆப்தேவை காவல்துறையினர் கைது செய்தனர்.

கடற்படை தினத்தை ஒட்டி, கடந்த ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி, மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜியின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அங்கு நடந்த நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்றிருந்தார். இதற்கிடையே, ராஜ்கோட் கோட்டையில் பிரதமர் மோடியால் திறக்கப்பட்ட மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி சிலை கடந்த மாதம் 26-ம் தேதியன்று உடைந்து விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிவாஜி சிலை உடைந்த விவகாரம் அரசியல் ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

விளம்பரம்

35 அடி உயரம் கொண்ட சிலை உடைந்த விவகாரத்தில் சத்ரபதி சிவாஜி குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோருவதாக பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தார்.

பிரதமர் மோடி தனது பேச்சில், “சிந்துதுர்க்கில் உள்ள கோட்டையில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சிலை உடைந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனக்கும் சரி, எனது சகாக்களும் சரி சத்ரபதி சிவாஜி ஓர் அரசர் என்பதை தாண்டி மரியாதைக்குரியவர்.

Also Read :
பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் – ஆம் ஆத்மி கூட்டணி.. ஹரியானாவில் நடப்பது என்ன?

விளம்பரம்

எனவே, சத்ரபதி சிவாஜியை கடவுளாக வணங்குபவர்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன். எங்களைப் பொறுத்தவரை, எங்கள் வணக்கங்களுக்குரிய தெய்வத்தை விட எதுவும் பெரியது அல்ல” என்று மன்னிப்பு கேட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் சத்ரபதி சிவாஜி சிலையை வடிவமைத்த கட்டிட பொறியாளர் சேதன் பட்டீல் கடந்த மாதம் 30-ம் தேதி கைது செய்யப்பட்டார். அதேநேரம், சிலையை வடித்த சிற்பி ஜெய்தீப் ஆப்தே தலைமறைவானார். அவரை பல இடங்களில் தேடி வந்த நிலையில், தானே மாவட்டத்தில் இன்று அவர் கைது செய்யப்பட்டார்.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Chhatrapati Shivaji Maharaj
,
Maharashtra
,
PM Modi

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்