சீக்கியர்களைப் பற்றி ஆபத்தான கருத்துகளை உருவாக்கும் ராகுல்: பாஜக

சீக்கிய சமூகம் குறித்து ஆபத்தான கருத்துகளைப் பரப்ப முயல்கிறார் ராகுல் காந்தி என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் மூன்று நாள் பயணமாக அமெரிக்காவிற்குச் சென்றுள்ளார். அங்கு அவரின் உரையில் சீக்கிய சமூகம் குறித்து அவதூறு கருத்துகளைப் பேசியதாகக் கண்டனம் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர் பேசியதாவது,

ராகுல் காந்தியின் கருத்துகள் எதிரானவை. அவர் வெளிநாடுகளில் வசிக்கும் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் பொய்யான கருத்துகளைப் பரப்புகிறார்.

சீக்கியர்கள் தலைப்பாகை மற்றும் கடா அணிய முடியாது என்று அவர் கூறியுள்ள கடுமையான வார்த்தைகளை நான் கண்டிக்கிறேன் என்று சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் கூறினார்.

கடந்த 1984ல் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், ராகுலின் குடும்பம் ஆட்சியில் இருக்கும்போது பாதுகாப்பின்மை, அச்சுறுத்தல் போன்ற உணர்வுகளை ஏற்படுத்தியது.

1984ல் சீக்கிய சமூகத்திற்கு எதிராக ஒரு படுகொலை நடந்தது. இதில் 3 ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே இழுத்துச் செல்லப்பட்டு, அவர்களைச் சுற்றி டயர்களை வைத்து உயிருடன் எரிக்கப்பட்டனர் என்று அவர் கூறினார்.

நமது தேசிய அடையாளம் ஒற்றுமை. ஒற்றுமை மற்றும் வேற்றுமையின் வலிமை உள்ளடக்கிய உணர்வுப்பூர்வமான பிரச்னைகளை ராகுல் சமீப காலமாக அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.

சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடின உழைப்பு மற்றும் நேர்மையுடன் அமெரிக்காவில் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர் அவர்களுக்கு மத்தியில் ராகுல் தவறான கதைகளைப் பரப்ப முயல்கிறார் என்றும் அவர் கூறினார்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்