சீக்கிரம்.. இந்தியன் – 3 படத்திற்காகக் காத்திருக்க முடியவில்லை: லோகேஷ் கனகராஜ்

சீக்கிரம்.. இந்தியன் – 3 படத்திற்காகக் காத்திருக்க முடியவில்லை: லோகேஷ் கனகராஜ்

இந்தியன் – 2 படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பாராட்டியுள்ளார்.

இயக்குநர் ஷங்கர் இயக்கிய இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) உலகம் முழுவதும் வெளியானது.

இந்தப் படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.

லஞ்சம் மற்றும் ஊழலை மையமாகக் கொண்டு உருவான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. இதன் காரணமாக, சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்வினைகளைச் சந்தித்து வருகிறது.

இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எக்ஸ் பக்கத்தில், “இந்தியன் – 2 நமது உலக நாயகன் கமல்ஹாசனின் ஈடுபாடுடன் கூடிய உழைப்புக்கு உதாரணம். பெரிய நோக்கங்களுக்காக இயக்குநர் ஷங்கருக்கும் பின்னணி இசைக்காக அனிருத்துக்கும் பாராட்டுகள். இந்தியன் – 3 படத்திற்காகக் காத்திருக்க முடியாது” எனத் தன் ஆவலைத் தெரிவித்துள்ளார்.

அதேபோல், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “ இந்தியன் – 2 படத்தை ரசித்தேன். இயக்குநர் ஷங்கர் சாரின் பெரிய எண்ணங்களுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் எப்போதும் எங்களின் முன்னோடி. கமல் சார் எப்போதும்போல் நெருப்புதான். படம் முகத்தில் அறைகிற கடுமையான எதார்த்தங்களை பேசியது பிடித்திருக்கிறது.” எனப் பதிவிட்டுள்ளார்.

Related posts

மும்பை: பாலியல் பலாத்கார குற்றவாளி போலீசாருடனான துப்பாக்கி சூட்டில் பலி

பலாத்காரத்திற்கு ஆளான மகளை 2 மகன்களுடன் சேர்ந்து பெற்ற தாயே தீர்த்து கட்டிய கொடூரம்

ஜம்மு காஷ்மீர் தேர்தல் – வாக்குறுதிகளை அறிவித்த ராகுல் காந்தி