சீதாராம் யெச்சூரிக்கு செயற்கை சுவாசம்! தீவிர சிகிச்சை

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சீதாராம் யெச்சூரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நுரையீரல் தொற்று காரணமாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி அனுமதிக்கப்பட்டாா்.

தீவிர சிகிச்சைப் பிரிவில்..

அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழு தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில், அவரின் உடலில் ஏற்பட்டுள்ள நோயின் தீவிரத்தன்மை குறித்து மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்படாமல் உள்ளது.

இந்த நிலையில், சீதாராம் யெச்சூரிக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

மோடி மீது வெறுப்புணர்வு..? -வெளிப்படையாக பதில் அளித்த ராகுல்

மேலும், இந்த இக்கட்டான சூழலில், மருத்துவமனையின் அனைத்து துறை சிறப்பு மருத்துவர்கள் குழு, அவரது உடல்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிக்கை

சீதாராம் யெச்சூரிக்கு அண்மையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

3-ஆவது முறையாக ஆட்சி; மும்மடங்கு பொறுப்புணர்வுடன் செயல்பாடு – நியூயார்க்கில் பிரதமர் மோடி!

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் காலமானார்!

கடந்த 5 ஆண்டுகளாக திருமலையில்… சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள தகவல்!