சீதாராம் யெச்சூரி மறைவு: குடியரசுத் தலைவர் இரங்கல்!

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.

சீதாராம் யெச்சூரி மறைவு

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி (72) சுவாச நோய் தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று (செப்டம்பர் 12) காலமானார்.

சீதாராம் யெச்சூரி காலமானார்

குடியரசுத் தலைவர் எக்ஸ் தளப் பதிவு

இதுபற்றி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இடதுசாரிகள்தான் எதிர்க்கட்சிகளின் இணைப்பு சக்தி! – சீதாராம் யெச்சூரி சிறப்பு நேர்காணல்

அந்தப் பதிவில், “மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி மறைவு வேதனையளிக்கிறது. மாணவர் தலைவராகவும், தேசியத் தலைவராகவும் பின்னர் மக்களவை உறுப்பினராகவும் தனித்துவமான செல்வாக்குமிக்கவராகவும் இருந்தார். அவரது உறுதியான சித்தாந்தங்களால் கட்சிக்கும் அப்பாற்பட்ட நண்பர்களை பெற்றிருந்தார். அவரது குடும்பத்தினருக்கும், அவரது சகாக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சீதாராம் யெச்சூரியின் உடல் தானம்!

Related posts

வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு

மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை… குடும்பத் தகராறில் விபரீதம்

மோடி ஆட்சிதான் காமராஜர் ஆட்சி – தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி