சீதாராம் யெச்சூரி மறைவு: ப.சிதம்பரம் இரங்கல்!

சீதாராம் யெச்சூரி மறைவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி (72) சுவாச நோய் தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை (செப்டம்பர் 12) காலமானார்.

அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

சென்னை முதல் தில்லி வரை சீதாராம் யெச்சூரியின் வாழ்க்கைப் பாதை…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மறைவு எனக்கு மிகுந்த அதிர்ச்சியைத் தந்தது.

“சர்வாதிகாரம், பிற்போக்குக் கொள்கைகள், பழமைவாதம், மனித உரிமைகள் மறுப்பு ஆகியவற்றை ஏற்ற கருத்துவாதிகளையும் அவர்களின் நடவடிக்கைகளையும் எதிர்த்து நடக்கும் தொடர் போராட்டத்தில் முன்னணி வீரராக விளங்கியவர் தோழர் சீதாராம் யெச்சூரி.

ஐக்கிய முன்னணி (1996), ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (2004) மற்றும் இந்தியா கூட்டணி (2024) ஆகியவற்றின் வெற்றிகளுக்குத் தோழர் யெச்சூரி ஆற்றிய பெறும் பணியை நான் அறிவேன்.

அவருடைய மறைவு இந்தியாவின் முற்போக்குக் கருத்துவாதிகளுக்கும் ஓர் பேரிழப்பு.”

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் யெச்சூரியின் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்