சீனாவில் கனமழை: மண் சரிவில் சிக்கி 11 பேர் பலி

சீனாவில் கிழக்குப்பகுதியில் கேமி புயலால் கனமழை பெய்து வருகிறது.

பீஜிங்,

சீனாவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி, 11 பேர் உயிரிழந்தனர். சீனாவின் கிழக்குப் பகுதி முழுவதிலும், கேமி புயலால் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தென்கிழக்கு பகுதியில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஹுனான் மாகாணத்தில் உள்ள ஹெங்யாங் நகரில் ஒரு வீட்டில் மண்சரிவு ஏற்பட்டது. இதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கனமழையால் மலைப்பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால், மண்சரிவு ஏற்பட்டுள்ளது. ஷாங்காய் நகரில் டெலிவரி பாய் மீது மரம் விழுந்தது இதில் அவர் உயிரிழந்தார். கேமி புயல் சீனாவை அடைவதற்கு முன்பு பிலிப்பைன்சில் பெய்த கனமழையால் 34 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

அமெரிக்க வாக்காளர்களிடம் கமலா ஹாரிசுக்கு அதிகரிக்கும் ஆதரவு – கருத்துக்கணிப்பில் புதிய தகவல்

சிந்து நதி நீர் ஒப்பந்த மறு ஆய்வு.. இந்தியாவின் நோட்டீசுக்கு பாகிஸ்தான் பதில்

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்