சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை

பெய்ஜிங்,

தென்மேற்கு சீனாவின் ஜிசாங் தன்னாட்சிப் பகுதியில் உள்ள நகு நகரின், நைமா கவுண்டியில் இன்று காலை 8:46 மணியளவில் திடீரெனெ நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவானதாக தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.

34.14 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 86.36 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் நிலநடுக்கம் கண்காணிக்கப்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் 8 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை

Related posts

ஆப்கானிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து முகாம்களுக்கு தலிபான்கள் தடை

உருகும் பனிப்பாறைகள்.. ஐ.நா. பொது சபையில் பிரச்சினையை முன்வைக்கும் நேபாள பிரதமர்

கனடாவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு