சீனாவில் வினோதமான கலச்சாரம் வைரல்: அது என்ன?

குறைந்தபட்ச கட்டணம் ரூ.11 முதல் அதிகபட்சமாக ரூ.4,100 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பிஜீங்,

சீனா நாடு எப்போதும் சர்ச்சைக்கு பெயர் போன நாடு ஆகும். அந்தவகையில் தற்போது வினோதமான கலாசாரம் அங்கு அதிகரித்து வருகிறது. அதாவது இளம்பெண்கள் பணம் சம்பாதிக்க வினோத வழியை தேர்வு செய்துள்ளனர். அதாவது நம் ஊர்களில் சாலைகளில் நடந்து சென்றால் மளிகை கடை, ஹோட்டல் உள்பட பல கடைகள் அணிவகுத்து இருக்கும். அங்கு காய்கறி, மளிகை பொருட்கள், உணவு பொருட்களின் விலை பட்டியல் என்பது எழுதி வைக்கப்பட்டு இருக்கும்.

ஆனால் சீனாவில் ஷென்சென் மற்றும் அதனை சுற்றிய நகரங்களின் தெருக்களின் ஓரங்களில் இளம்பெண்கள் வரிசையாக அமர்ந்துள்ளனர். அவர்களின் முன்பு பல்வேறு விதமான ‛ரேட் கார்டுகள்' வைக்கப்பட்டுள்ளன. அந்த ரேட் கார்ட்தான் தற்போது விவாதமாகி உள்ளது.

அதாவது இளம்பெண்களை முத்தமிட்டு கொள்ளலாம், கட்டிப்பிடித்து கொள்ளலாம், திரைப்படம் பார்க்க அழைத்து செல்லலாம், வீட்டு வேலைக்கு பயன்படுத்தி கொள்ளலாம், ஒன்றாக மது அருந்தவும் அழைத்து செல்லலாம் என்று அந்த ரேட் கார்டுகளில் எழுதப்பட்டு உள்ளதோடு, அதற்கென தனித்தனியாக கட்டணமும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கட்டணம் என்பது குறைந்தபட்சம் ரூ.11 முதல் அதிகபட்சமாக ரூ.4,100 வரை நிர்ணயம் செய்துள்ளனர். அதன்படி ஒருமுறை இளம்பெண்களை கட்டிப்பிடிக்கவேண்டும் என்றால் ரூ.11 வழங்க வேண்டும். இளம்பெண்ணுக்கு முத்தமிட அல்லது இளம்பெண்ணிடம் இருந்து முத்தம் பெற கட்டணம் ரூ.110 ஆக உள்ளது. மேலும் தியேட்டரில் ஒன்றாக சேர்ந்து படம் பார்க்க ரூ.150, வீட்டு வேலைகளை செய்வதற்கு ரூ.2000, ஒன்றாக சேர்ந்து மதுபானம் அருந்த ரூ.4,100 என்று கட்டணங்கள் தனித்தனியே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பெண்களுடன் பாலியல் உறவு வைத்து கொள்ள அனுமதி இல்லை. அதாவது தனிமையில் தவிக்கும் நபர்களுக்கு துணையாக இருந்து அன்பை பரிமாறும் வகையில்தான் இந்த சேவையை செய்வதாக இளம்பெண்கள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பான போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது. சீனாவில் இதுபோன்ற வினோதமான கலாச்சாரம் வைரலாகி வருகிறது. இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். திருமணத்துக்கு பெண் கிடைக்காத அதேவேளையில் திருமண உறவில் இணைய விரும்பாதவர்கள் இளம்பெண்களுடன் அன்பை பரிமாறிக்கொள்ள இது வரப்பிரசாதம் என்று அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் மற்றொரு தரப்பு எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. அதாவது பணம் சம்பாதிப்பதற்காக பெண்கள் இந்த அளவுக்கு இறங்கி செல்வதா? இத்தகைய நடவடிக்கையை சீனாவில் தடை செய்ய வேண்டும் என்று அவர்கள் கண்டன குரலை எழுப்பி வருகின்றனர்.

Related posts

முக்கிய வழக்குகளை மீண்டும் தோண்டி எடுத்து விசாரணை: இலங்கை புதிய அரசு உத்தரவு

லெபனானை முழு பலத்துடன் ஆதரிப்போம் – ஈரான்

ஈராக்கில் இருந்து இஸ்ரேல் மீது டிரோன் தாக்குதல்