சீனா ஓபன் டென்னிஸ்; கோகோ காப் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

இறுதிப்போட்டியில் கோகோ காப் – கரோலினா முச்சோவா ஆகியோர் மோத உள்ளனர்.

பீஜிங்,

சீனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் ஒரு அரையிறுதி ஆட்டத்தில் கோகோ காப் (அமெரிக்கா) – பவுலா படோசா (ஸ்பெயின்) ஆகியோர் மோதினர்.

இந்த ஆட்டத்தில் 4-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் பவுலா படோசாவை வீழ்த்தி கோகோ காப் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நேற்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் செக் குடியரசின் கரோலினா முச்சோவா – சீனாவின் கின்வென் ஷெங் உடன் மோதினார்.

இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கரோலினா முச்சோவா 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் கின்வென் ஷெங்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் கோகோ காப் – கரோலினா முச்சோவா ஆகியோர் மோத உள்ளனர்.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய மண்ணில் வரலாறு படைத்த நியூசிலாந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; கேரளாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற பெங்களூரு

சாண்ட்னெர் சுழலில் சிக்கிய இந்தியா… முதல் இன்னிங்சில் 156 ரன்களில் ஆல் அவுட்