சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவு!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணைருக்கு மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும், யூடியூபருமான சாட்டை துரைமுருகன் காவல்துறையினரால் தென்காசி மாவட்டத்தில் முன்னதாக கைது செய்யப்பட்டார்,

இது தொடர்பாக பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “கொலை செய்பவர்கள், சாராயம் காய்ச்சுபவர்கள் மீது பாயாத வழக்கு மேடையில் பேசியதற்காகப் பாய்கிறது.

தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில்: மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!

கருணாநிதி குறித்தப் பாடலை மேடையில் பாடியதற்காகக் கைது செய்திருக்கிறார்கள். அந்தப் பாடலைப் எழுதியவர், பாடியவரைக் கைது செய்தார்களா? இப்போது நான் அந்தப் பாடலைப் பாடுகிறேன். என்மேல் வழக்குப்பதிவு செய்யுங்கள்” என்று கூறிய சீமான் கருணாநிதி குறித்த அவதூறுப் பாடலை பத்திரிகையாளர்கள் முன்பு பாடிக் காட்டினார்.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து அஜேஷ் என்பவர் பட்டபிராம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அஜேஷ் அளித்த புகாரின் பேரில் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கதாத நிலையில், மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்திடம் சீமான் குறித்து அவர் புகார் அளித்தார்.

இந்நிலையில், சீமான் அவதூறாகப் பேசியது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, சீமான் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையருக்கு மாநில எஸ்.சி., எஸ்.சி. ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

US To Test Hypersonic Nuclear Missile After Polls Close: Report

2024 Maruti Suzuki Dzire Officially Revealed, Launch On November 11

Maharashtra Elections 2024: Shinde Sena Leaders Target Chhagan Bhujbal, Sunil Tatkare Over Alleged Disruptive Tactics