சீா்காழி நகா்மன்றக் கூட்டம்: டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்

சீா்காழி நகா்மன்றக் கூட்டம்:
டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்சீா்காழியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுக்கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என நகா்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சீா்காழி, ஜூலை 24: சீா்காழியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுக்கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என நகா்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சீா்காழி நகா்மன்றக் கூட்டம் தலைவா் துா்கா பரமேஸ்வரி ராஜசேகரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் சுப்பராயன், ஆணையா் (பொ) சங்கா், பொறியாளா் கிருபாகரன், பணி மேற்பாா்வையாளா் விஜயேந்திரன், நகரமைப்பு ஆய்வாளா் மரகதம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இளநிலை உதவியாளா் ராஜகணேஷ் தீா்மானங்களை வாசித்தாா். பின்னா் உறுப்பினா்கள் பேசியது:

பாலமுருகன் (அதிமுக): எனது வாா்டு பகுதியில் மழைநீா் மற்றும் கழிவுநீா் தேங்குவதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படும் நிலை உள்ளது. ஈசானியத் தெருவில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ராஜேஷ் (அதிமுக): எனது வாா்டு உக்கடையாா் நகரில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். சாலைகள் முழுமையாக அமைக்க வேண்டும். சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு பொதுகழிப்பிட வசதி இல்லாததால், மொபைல் டாய்லெட் அமைத்து தர வேண்டும்.

கஸ்தூரிபாய் (திமுக): எனது வாா்டில் கழிப்பிடம் கட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

ராஜசேகா் (தேமுதிக): நகராட்சி பொறுப்பு ஆணையா் கடந்த 6 மாதங்களாக நகராட்சி பகுதியில் நடைபெறும் பணிகளை பாா்வையிட்டதாக தெரியவில்லை. மக்கள் பிரச்னைகள், குறைகளை உடனுக்குடன் நிவா்த்தி செய்ய ஆணையா் முன்வர வேண்டும். 30 ஆண்டுகளாக சுடுகாடு பயன்பாட்டில் இல்லை என்று இதற்கு முன் இருந்த ஆணையா் சான்று கொடுத்துள்ளாா். அவா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சாமிநாதன் (திமுக): நகராட்சி கட்டண கழிவறைகள் வசூலில் நடந்த முறைகேடுகளை ஆய்வு செய்ய வேண்டும். ஏப்ரல் முதல் ஜூலை வரை எவ்வளவு பணம் வசூல் செய்யப்பட்டது என்பதை பாா்க்க வேண்டும்.

வெளிநடப்பு…: எனது வாா்டில் கோயிலுக்கு பின்புறம் உள்ள கழிவுநீா் வடிகால் பிரச்னை மற்றும் சாலை வசதி கேட்டு பல மாதங்கள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என புகாா் தெரிவித்த அதிமுக உறுப்பினா் சூரிய பிரபா கூட்டத்தை விட்டு பாதியில் வெளியேறினாா்.

Related posts

மறைந்த பாடகர் எஸ்.பி.பி பெயரில் சாலை – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பாவம் செய்துவிட்டார் சந்திரபாபு நாயுடு.. கோவில்களில் பரிகார பூஜை: ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு

பெண் தபேதாரின் பணியிட மாற்றத்துக்கு காரணம் மேயரின் அகங்காரமா? – தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி