சுங்கச்சாவடியை சூறையாடிய புல்டோசர் ஓட்டுநர் – வைரல் வீடியோ!

சுங்கச்சாவடியை சூறையாடிய புல்டோசர் ஓட்டுநர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..

வைரல் வீடியோ

சுங்கக் கட்டணம் கேட்டதால் ஆத்திரமடைந்த புல்டோசர் ஓட்டுநர், சுங்கச் சாவடியை இடித்து சூறையாடிய காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

நாடு முழுவதும் ஏராளமான சுங்கச் சாவடிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இருசக்கர வாகனங்களைத் தவிர, மற்ற அனைத்து விதமான வாகனங்களுக்கும் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், முக்கிய பிரமுகர்கள் சுங்கச் சாவடிகளை கடந்து செல்லும்போது, அடிக்கடி தகராறு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. அதேபோல், ஒரு சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் உள்ள சுங்கச் சாவடியில் நடந்துள்ளது.

விளம்பரம்

ஹபூரில் உள்ள சாஜர்சி சுங்கச் சாவடியை புல்டோசர் ஒன்று கடந்து செல்ல முற்பட்டது. அப்போது, சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டணம் செலுத்துமாறு கூறியுள்ளனர். ஆனால், தன்னிடம் பணம் இல்லை என்றும், தற்போது பணிக்கு தான் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், சுங்கக் கட்டணம் செலுத்தாமல், கடந்து செல்ல முடியாது என்று கூறி, புல்டோசர் ஓட்டுநரை திரும்பிச் செல்லுமாறு கூறியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த புல்டோசர் ஓட்டுநர், திடீரென சுங்கச் சாவடியை சூறையாடத் தொடங்கினார். புல்டோசர் மூலம் அடித்து நொறுக்கியதில், 2 கட்டண வசூல் மையங்கள் தகர்க்கப்பட்டன.

விளம்பரம்

இந்த காட்சியை அங்கிருந்த பிற வாகன ஓட்டிகளும், சுங்கச் சாவடி ஊழியர்களும் தங்களது செல்போனில் படம் பிடித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, ஹபூர் மாவட்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, புல்டோசர் ஓட்டுநர் தீரஜ் என்பவரை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், புல்டோசர் ஓட்டுநர் குடிபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. இதனிடையே, சுங்கச் சாவடியை புல்டோசர் ஓட்டுநர் தகர்த்த வீடியோ சமூகவலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

இதனிடையே, சுங்கச் சாவடி தகர்க்கப்பட்டதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து கமெண்ட் பதிவிட்டுள்ளனர். வாகனங்கள் வாங்கும்போதே சாலை வரி செலுத்தும் நிலையில், சுங்கச் சாவடிகள் மூலம் வழிப்பறி நடப்பதாக கூறியுள்ள சிலர், சுங்கச் சாவடிகள் அனைத்தையும் உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Toll gate
,
Toll Plaza
,
uttar pradesh

Related posts

பெங்களூருவில் அதிர்ச்சி: இளம்பெண் உடல் 30 துண்டுகளாக பிரிட்ஜில் இருந்த கொடூரம்

“ஏழுமலையானே என்னை மன்னித்துவிடு…” – பவன் கல்யாண் பதிவு

காவல் நிலையங்களில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: நவீன் பட்நாயக்