சுங்கவரி விதிப்பில் முக்கிய மாற்றம் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க சுங்கவரி விதிப்பில் மாற்றம் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

நிர்மலா சீதாராமன்

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையிலும் ஏற்றுமதியை அதிகரிக்கும் பொருட்டும் சுங்கவரி விதிப்பில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அதன்படி, செல்போன்கள், செல்போன் சார்ஜர்கள், மொபைல் பிரிண்டட் சர்க்யூட் போர்டு உள்ளிட்டவை மீதான அடிப்படை சுங்கவரி 20 சதவீதத்தில் 15 சதவீதமாக குறைத்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 3 முக்கிய புற்றுநோய் சிகிச்சை மருந்துகளுக்கு 10 சதவீதம் அடிப்படை சுங்க வரி வசூலிக்கப்பட்ட நிலையில், அதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

ஆன்லைன் மூலம் வாங்கப்படும் பொருட்கள் மீதான டிடிஎஸ் வரி பிடித்தம் 1 சதவீதத்தில் இருந்து 0.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆன்லைனில் பொருட்களை விற்போர் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. லித்தியம், தாமிரம், கோபால்ட் உள்ளிட்ட 25 உலோகங்களுக்கு சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் அவற்றை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலை குறையும்.

இது தவிர்த்து ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள், இறால் உள்ளிட்டவையின் உணவுகளுக்கான சுங்க வரி விதிப்பு 15 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
சோலார் மின்உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், பேனல்களுக்கு தேவையான மூலதனப் பொருட்களுக்கு வரிவிலக்கு அதிகரித்து நிதியமைச்சர் அறிவித்துள்ளார். தோல் பொருட்களின் உற்பத்திக்கான சுங்க வரி 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

இதனிடையே, உள்நாட்டில் உயர்கல்வி கற்பதற்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மக்களவையில் பேசிய அவர், அனைத்து துறைகளிலும், மாத ஊதியம் ஒரு லட்சம் ரூபாய்க்குள் புதிதாக ஊழியர்களை சேர்க்கும் நிறுவனங்களுக்கு வருங்கால வைப்பு நிதியில் சலுகை வழங்கப்படும் என்றார்.

அதாவது, புதிதாக பணியில் சேரும் ஊழியர்களுக்கு நிறுவனம் வழங்கும் வைப்பு நிதியை 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விளம்பரம்

கல்வியை பொறுத்தவரை, உள்நாட்டில் உயர்கல்வி கற்பதற்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். நாட்டில் உள்ள 500 முதன்மையான நிறுவனங்களில் 5 ஆண்டுகளுக்கு 1 கோடி இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

இதையும் படிங்க: முதன்முறை பணிக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியம் ஊக்கத் தொகை… பட்ஜெட்டில் அறிவிப்பு

12 மாதங்கள் வழங்கப்படும் இப்பயிற்சிக்கு மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாயும், ஒரு முறை 6 ஆயிரம் ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, ஒட்டுமொத்தமாக ஓராண்டு பயிற்சிக்கு 66 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை கிடைக்கும்.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
FINANCE MINISTER NIRMALA SITHARAMAN
,
PM Modi

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்