சுதந்திர தினத்திற்கு முன் தாக்குதல் திட்டம்… அசாம் டி.ஜி.பி. பேட்டி

கவுகாத்தி,

நாட்டின் சுதந்திர தினம் வருகிற 15-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, நாடு முழுவதும் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில், அசாம் டி.ஜி.பி. ஜி.பி. சிங் கூறும்போது, அசாமின் அப்பர் பகுதி மற்றும் அருணாசல பிரதேச எல்லை பகுதிகளில் ஐக்கிய சுதந்திர அசோம் முன்னணி-விடுதலை பிரிவினர் தீவிரத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.

அவர்கள் சுதந்திர தினத்துக்கு முன் தாக்குதலை நடத்த திட்டமிட்டு உள்ளனர் என கூறியுள்ளார். எனினும், மாநில போலீசார், ராணுவம் மற்றும் பிற துணை ராணுவ படையினர் இணைந்து அவர்களை மட்டுப்படுத்தும் பணிக்கு தயாராகி வருகின்றனர் என கூறியுள்ளார்.

இந்த தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் தாக்குதலை முறியடிக்க, மாநில மற்றும் மத்திய அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகள் பல பகுதிகளில் பலப்படுத்தப்பட்டு உள்ளன. எல்லா விதத்திலும் நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, அந்த பகுதியில் டி.ஜி.பி. முகாமிட்டு உள்ளார். 2004-ம் ஆண்டில் சுதந்திர தின அணிவகுப்பின்போது, தேமாஜி கல்லூரி மைதானத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 18 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்புக்கு பின்னர், கல்லூரிக்கு அருகே காவல் வாகனங்கள் மீது உள்ளூர்வாசிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனை தொடர்ந்து, அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர்.

Related posts

விழுப்புரம்- திருச்சி பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம்

ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை குற்றப் பரம்பரையாக சித்தரிப்பதா? நடிகை கஸ்தூரிக்கு ஆ.ராசா கண்டனம்

‘2கே லவ் ஸ்டோரி’ படத்தின் டீசர் குறித்த அப்டேட்