சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தை சேர்ந்த 23 போலீஸ் அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் பதக்கம்
சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக காவல் துறையைச் சேர்ந்த 23 பேருக்கு குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய குடியரசு தலைவரின் தகைசால் பணிக்கான காவல் விருது தமிழக காவல்துறையைச் சேர்ந்த ஊர்க்காவல் படை டிஜிபி வன்னியப்பெருமாள், தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.
மெச்சத்தகுந்த பணிக்கான காவல் விருதுகள், தமிழக காவல்துறையைச் சேர்ந்த தென் சென்னை காவல் கூடுதல் ஆணையர் டி.கண்ணன், தொழில் நுட்ப பிரிவு ஐஜி ஏ.ஜி.பாபு, சேலம் காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு, கரூர் மாவட்ட எஸ்.பி.பெரோஸ்கான் அப்துல்லா, தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகம் (எஸ்.பி) து.பெ.சுரேஷ் குமார், மத்திய மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி. கிங்ஸ்லின், சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்.பி சியாமளா தேவி, திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி. கே.பிரபாகர், குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வு துறை எஸ்.பி. பாலாஜி சரவணன், வேலூர் காவலர் பயிற்சி பள்ளி கூடுதல் எஸ்.பி.ராதாகிருஷ்ணன், சென்னைபாதுகாப்பு மற்றும் குற்ற புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் பா.சந்திரசேகர், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு தலைமையிட துணை காவல் கண்காணிப்பாளர் டில்லிபாபு, திருநெல்வேலி சிறப்பு புலனாய்வு பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் மனோகரன், சென்னை தமிழ்நாடு காவல்உயர் பயிற்சியக துணைக் காவல்கண்காணிப்பாளர் செ.சங்கு, சென்னை தமிழ்நாடு அதிதீவிரப்படை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன், கோயம்புத்தூர் க்யூ பிரிவு குற்றப்புலனாய்வு துறை காவல் ஆய்வாளர் சந்திரமோகன், சென்னை தனிப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் மு.ஹரிபாபு, திருவாரூர் குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் தமிழ்ச் செல்வி, சென்னை காவல் நுண்ணறிவுப் பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முரளி, சென்னை தலைமையிட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை சிறப்புகாவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன், தாம்பரம் தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முரளிதரன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
முதல்வரின் சிறப்பு பதக்கம்: இதேபோல் சுதந்திர தினத்தைமுன்னிட்டு, தமிழக முதல்வரின் சிறப்பு பதக்கங்கள் பெறும் காவல் அதிகாரிகள் தொடர்பாக தமிழக உள்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வேலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் கி.புனிதா, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவு ஆய்வாளர் து.வினோத்குமார், கடலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை கண்காணிப்பாளர் ச.சவுமியா, திருப்பூர் மாநகர சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் ஐ.சொர்ணவள்ளி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சிபிசிஐடி ஆய்வாளர் நா.பார்வதி, திருப்பூர் சிபிசிஐடி ஆய்வாளர் பெ.ராதா, செங்கல்பட்டு காவல்துணை கண்காணிப்பாளர் செ.புகழேந்தி கணேஷ், ஈரோடு மாவட்டம் பெருந்துறை காவல் ஆய்வாளர் இரா.தெய்வராணி, வேலூர் மாவட்டம் பொன்னை காவல் நிலைய ஆய்வாளர் ஆ.அன்பரசி, தூத்துக்குடி ஊரக உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் நா.சுரேஷ் ஆகியோருக்கு சிறப்புப்பணி பதக்கங்கள் வழங்கப்படுகிறது.
அதேபோல், பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய 5 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கம் வழங்கப்படுகிறது.
அதன்படி, சிபிசிஐடி ஐஜி தா.ச.அன்பு, தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவு கண்காணிப்பாளர் இ.கார்த்திக், சேலம்தனிப்பிரிவு குற்றப்புலானய்வுப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சி.ர.பூபதி ராஜன்,சென்னை காவல் தொலைத்தொடர்புப் பிரிவு ஆய்வாளர் க.சீனிவாசன், திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு உதவி ஆய்வாளர் பு.வ.முபைதுல்லாஹ் ஆகியோருக்கும் காவல் பதக்கம் வழங்கப்படுகிறது.
விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா 8 கிராம்எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும், ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். இந்தவிருதுகள், முதல்வர் மு.க.ஸ்டாலினால் வேறொரு விழாவில் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.