சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுவது குறித்து மனம் திறந்த ஷுப்மன் கில்!

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப்மன் கில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுவது குறித்து மனம் திறந்துள்ளார்.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் இளம் வீரர்களான ரிஷப் பந்த் மற்றும் ஷுப்மன் கில் இருவரும் சிறப்பாக விளையாடி சதம் விளாசி அசத்தினர்.

அவர்கள் இருவரும் சுழற்பந்துசாளர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு ரன்கள் குவித்தனர். ரிஷப் பந்த் 109 ரன்களும், ஷுப்மன் கில் 119* ரன்களும் எடுத்தனர்.

எம்.எஸ்.தோனியின் சாதனையை சமன் செய்த ரிஷப் பந்த்!

மனம் திறந்த ஷுப்மன் கில்

சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுவது குறித்து ஷுப்மன் கில் மனம் திறந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பந்துவீச்சாளார்களுக்கு எதிராக ஆடுகளத்தில் இறங்கி வந்து விளையாடும் பயிற்சியில் ஆரம்பத்திருலிருந்து ஈடுபட்டு வருகிறேன். அதிலும் குறிப்பாக, சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆடுகளத்தில் இறங்கி வந்து விளையாடி ரன்களை சேர்ப்பேன். வங்கதேசத்துக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் போட்டியிலும் அதனையே செயல்படுத்துகிறேன்.

ஜடேஜா மீது எப்போதும் பொறாமை கொள்கிறேன்: ரவிச்சந்திரன் அஸ்வின்

இளம் வயதிலிருந்து அதிக பயிற்சி மேற்கொண்டதால், ஆடுகளத்தில் இறங்கி வந்து விளையாடுவது எனக்கு எளிதாக உள்ளது. சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ரன்கள் குவிப்பது மிகுந்த மனநிறைவைக் கொடுக்கிறது. இந்த டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக அதிகம் பயிற்சி மேற்கொண்டேன். இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் தொடர் எனது நம்பிக்கையை அதிகரித்ததாக நினைக்கிறேன். எனது சிறப்பான ஆட்டம் இன்னும் வரவில்லை என்றார்.

Related posts

ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் மோடி!

அரிய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

ம.நீ.ம. தலைவராக மீண்டும் கமல்ஹாசன்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து