சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் வாகன விற்பனை 19% அதிகரிப்பு!

மும்பை: ஜப்பானைச் சேர்ந்த சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம், இந்தியாவில் அதன் வாகன விற்பனை 19 சதவிகிதம் அதிகரித்து, 2024 அக்டோபரில் அது 1,20,055 ஆக உள்ளது என்று தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்நிறுவனம் மொத்தம் 1,00,507 வாகனங்களை விற்பனை செய்திருந்தது.

இதையும் படிக்க: அதிபர் தேர்தல்: அமெரிக்க தலைநகரில் உச்சகட்ட பாதுகாப்பு!

2023 அக்டோபரில் 84,302 யூனிட்களாக இருந்தத உள்நாட்டு விற்பனை, 2024 அக்டோபர் மாதத்தில் 1,04,940 வாகனங்கள் விற்பனையாகி வரலாறு சாதனை படைத்துள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு 24% வளர்ச்சி என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதே வேளையில் 2024 அக்டோபரில் ஏற்றுமதி 7 சதவிகிதம் குறைந்து 15,115 வாகனங்களாக இருந்தது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 16,205 வாகனங்களை விற்பனை செய்ததாக சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா தெரிவித்துள்ளது.

Related posts

புல்லட் ரயில் கட்டுமானப் பணியின்போது விபத்து! தொழிலாளர்கள் கதி என்ன?

ஏவுகணை பரிசோதனை: வட கொரியாவுக்கு ஜப்பான், அமெரிக்கா கண்டனம்!

ஜார்க்கண்ட்டில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள், ரூ.15 லட்சத்துக்கான காப்பீடு -இந்தியா கூட்டணி தேர்தல் அறிக்கை