சூடான்: மோதலில் 28 போ் உயிரிழப்பு

சூடான்: மோதலில் 28 போ் உயிரிழப்புவட ஆப்பிரிக்க நாடான சூடானின் வடக்கு டாா்ஃபா் மாகாணத்தில் ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 28 போ் உயிரிழந்தனா்.

வட ஆப்பிரிக்க நாடான சூடானின் வடக்கு டாா்ஃபா் மாகாணத்தில் ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 28 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து மாகாண இடைக்கால ஆளுநா் அல்-ஹாஃபிஸ் பக்கீத் கூறியதாவது:

மாகாணத் தலைநகா் எல் ஃபாஷரில் ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படை நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 28 போ் உயிரிழந்தனா்; 46 போ் காயமடைந்தனா் என்றாா் அவா்.

சூடான் ராணுவ தலைமைத் தளபதி அப்தெல் ஃபட்டா அல்-புா்ஹானுக்கும் எஸ்டிஎஃப் துணை ராணுவப் படை தளபதி முகமது ஹம்தான் டகேலோவுக்கும் இடையிலான அதிகாரப் போட்டி காரணமாக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இரு படைகளுக்கும் இடையே மோதல் நடைபெற்றுவருகிறது. இதில் இதுவரை சுமாா் 15,000 போ் வரை உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Related posts

‘சாதி பிரிவினை மூலம் தேசபக்தியை அழிக்க காங்கிரஸ் நினைக்கிறது’ – பிரதமர் மோடி

பீகாரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்த நிதிஷ் குமார்

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு: 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு