சூப்பர் 8 சுற்று: ஆஸ்திரேலியா அபார பந்துவீச்சு….141 ரன்களை இலக்காக நிர்ணயித்த வங்காளதேசம்

ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 3 விக்கெட் , ஆடம் ஜாம்பா 2 விக்கெட் வீழ்த்தினர்.

ஆன்டிகுவா,

9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவடைந்து தற்போது சூப்பர் 8 சுற்று நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி , வங்காளதேச அணி முதலில் களமிறங்கியது. தொடக்கத்தில் தன்சித் ஹசன் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தொடர்ந்து லிட்டன் தாஸ் 16 ரன்களுக்கும் , ரிஷாத் ஹொசைன் 2 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் நஜ்முல் ஹொசைன் , டவ்ஹித் ஹிரிடோய் இருவரும் இணைந்து நிலைத்து ஆடினர். சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். நஜ்முல் ஹொசைன் 41 ரன்களுக்கும் , டவ்ஹித் ஹிரிடோய் 40 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இறுதியில் வங்காளதேச அணி 20ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்தது.ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 3 விக்கெட் , ஆடம் ஜாம்பா 2 விக்கெட் வீழ்த்தினர்.

Related posts

மகளிர் டி20 உலகக்கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

மகளிர் டி20 கிரிக்கெட்; லிட்ச்பீல்ட் அபாரம்… நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா

சச்சினின் மாபெரும் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி