‘சூப்பர் 8’ சுற்று: டி காக் அரைசதம்…தென் ஆப்பிரிக்கா அணி 194 ரன்கள் குவிப்பு

அதிரடி காட்டிய டி காக் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்

ஆன்டிகுவா,

டி20 உலகக்கோப்பை,கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. லீக் சுற்று முடிவடைந்த நிலையில் இன்று 'சூப்பர் 8' சுற்று தொடங்கியது. இதில் இன்று நடைபெறும் 'சூப்பர் 8' சுற்று ஆட்டத்தில் எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி, ஆரோன் ஜோன்ஸ் தலைமையிலான அமெரிக்காவை எதிர்கொள்கிறது.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற அமெரிக்கா அணியின் கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கத்தில் ரீஸா ஹென்ரிக்ஸ் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து குயின்டன் டி காக் , மார்க்ரம் இருவரும் இணைந்து சிறப்பாக ஆடினர். பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டனர். அதிரடி காட்டிய டி காக் அரைசதமடித்தார். அவர் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் மார்க்ரம் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசியில் சிறப்பாக விளையாடி கிளாசன் 36 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு தென் ஆப்பிரிக்கா அணி 194 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 195 ரன்கள் இலக்குடன் அமெரிக்க அணி விளையாடுகிறது.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய மண்ணில் வரலாறு படைத்த நியூசிலாந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; கேரளாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற பெங்களூரு

சாண்ட்னெர் சுழலில் சிக்கிய இந்தியா… முதல் இன்னிங்சில் 156 ரன்களில் ஆல் அவுட்