சூரஜ் ரேவண்ணாவுக்கு ஜூலை 1 வரை காவல்

சூரஜ் ரேவண்ணாவுக்கு ஜூலை 1 வரை காவல்ரேவண்ணா குடும்பத்தில் மீண்டும் சிக்கல்…

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவின் சகோதரர் சூரஜ் ரேவண்ணாவை ஜூலை 1ம் தேதி வரை சிஐடி காவலில் வைக்க நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும் கர்நாடகத்தின் ஹோலேநரசிபுரா தொகுதி எம்எல்ஏவுமான ஹெச்.டி. ரேவண்ணாவின் மூத்த மகனான சூரஜ் ரேவண்ணா தான் சார்ந்துள்ள கட்சித் தொண்டரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, அவர் மீது பாதிக்கப்பட்ட நபர் கடந்த சனிக்கிழமையன்று அளித்த புகாரின் அடிப்படையில், ஹாசன் பகுதியில் தங்கியிருந்த சூரஜ் ரேவண்ணாவை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில், சூரஜ் ரேவண்ணா மீதான பாலியல் வழக்கு, குற்றவியல் புலனாய்வுத் துறை(சிஐடி) விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதன்பிறகு நேற்றிரவு கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். அப்போது 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

அதன்பின்னர், வழக்குப் பதிவைப் பெற்ற பிறகு, அவரை மேலதிக விசாரணைக்காக காவலில் வைக்கக் கோரி சிஐடி திங்கள்கிழமை நீதிமன்றத்தை அணுகியது. இதையடுத்து அவர் ஜூலை 1 வரை சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்