சூரிய மின்சக்தியில் தமிழ்நாடு புதிய சாதனை – ஒரே நாளில் 5,979 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி

ஒரே நாளில் 5,979 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து சூரிய மின்சக்தியில் தமிழ்நாடு புதிய சாதனை படைத்துள்ளது.

சென்னை,

சூரிய மின்சக்தியில் தமிழ்நாடு புதிய சாதனை படைத்துள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 09.08.2024(நேற்று) ஒரே நாளில் 5,979 மெகாவாட்(MW) மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது முந்தைய சாதனையான 5,704 மெகாவாட்டை (02.08.2024) விஞ்சியுள்ளது. மேலும், 41.40 மில்லியன் யூனிட்(MU) மின்சாரம் அதிகபட்சமாக மின் கட்டமைப்பில் உட்கொள்ளப்பட்டுள்ளது. இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் தமிழ்நாட்டின் முதன்மையை உறுதிப்படுத்துகிறது என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழகம் சூரிய மின்சக்தியில் புதிய சாதனை படைத்துள்ளது! 09.08.2024 அன்று 5979 MW மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது, இது முந்தைய சாதனையான 5704 MW ஐ (02.08.2024) விஞ்சியுள்ளது. மேலும், 41.40 MU மின்சாரம் அதிகபட்சமாக மின் கட்டமைப்பில் உட்கொள்ளப்பட்டுள்ளது. இது புதுப்பிக்கத்தக்க… pic.twitter.com/Nsskyb3y8v

— TANGEDCO Official (@TANGEDCO_Offcl) August 10, 2024

Related posts

இந்திய வளா்ச்சியில் பங்கேற்க வேண்டும்: சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

பிகாா்: புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது

பஞ்சாப் அமைச்சரவை மாற்றம்: 4 போ் நீக்கம்; 5 பேருக்கு பதவி