சூர்யாவுடன் மோதும் சூர்யா விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் நடித்துள்ள திரைப்படம் கங்குவாவுடன் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் விஜய் சேதுபதி மகாராஜா திரைபடத்தில் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

அவருடைய மகன் சூர்யா விஜய் சேதுபதி சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கத்தில் ‘பீனிக்ஸ் – வீழான்’ திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகவுள்ளார்.

இதையும் படிக்க: கோட் வசூல் வெற்றியைக் கொண்டாடிய விஜய்!

இப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அன்றே, நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படமும் வெளியாகிறது. நாயகனாக அறிமுகமாகும்போதே நட்சத்திர நடிகருடன் மோதுவது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: 4 போ் கைது

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

சர்ஃபராஸ் கான் சதம்..! மழையினால் பெங்களூரு டெஸ்ட் போட்டி பாதிப்பு!