சூர்யா – ஆர். ஜே. பாலாஜி படம் அறிவிப்பு!

சூர்யாவின் 45-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தை முடித்தபிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இது, அவரது 44-வது படமாக உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சூர்யா யார் படத்தில் நடிப்பார் என எதிர்பார்ப்பு எழுந்தது.

இயக்குநர் வெற்றிமாறனுடன் வாடிவாசல் படத்தில் இணைகிறாரா இல்லை சுதா கொங்காராவுடனான பேச்சுவார்த்தை துவங்குமா என எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படிக்க: வேட்டையன் வசூல் எவ்வளவு? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஆனால், முற்றிலும் எதிர்பாராத வகையில் புதிய தகவல் வெளியானது. அதன்படி, சூர்யாவின் 45-வது படத்தை நடிகர் ஆர். ஜே. பாலாஜி இயக்கவுள்ளதாவும் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நாயகனாக நடிக்கும் அவரது 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கவுள்ளதாகவும் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகராக மட்டும் அறியப்பட்ட ஆர். ஜே. பாலாஜி, சூர்யாவை இயக்கவுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது