சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு

'கங்குவா' திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ள 'கங்குவா' திரைப்படம் 10 மொழிகளில் வெளியாக உள்ளது. 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகின்றன. 'கங்குவா' திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 'கங்குவா' படத்தின் டிரைலர் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 12) வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

The anticipation ends now! The time for glory is arriving ✨
Get ready for a celebration like no other ❤️
The grand #KanguvaTrailer is all set to be yours from 12th August#KanguvaFromOct10#Kanguva@Suriya_offl@DishPatani@thedeol@directorsiva@ThisIsDSP#StudioGreen… pic.twitter.com/OJ8eRvIv6X

— Studio Green (@StudioGreen2) August 10, 2024

Original Article

Related posts

பாலியல் புகாரை நிரூபித்தால் கணவரை விட்டு விலக தயார்- ஜானி மாஸ்டர் மனைவி

ரிஷப் ஷெட்டி இல்லை…’காந்தாரா’வில் முதலில் நடிக்க இருந்தது இவர்தான்

கார் விபத்தில் சிக்கிய பிரபல பாலிவுட் நடிகர் – ஐசியுவில் அனுமதி