சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

மும்பை : பங்குச் சந்தை குறியீட்டு குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கடந்த அமர்வில் வரலாறு காணாத ஏற்றம் கண்ட நிலையில், முதலீட்டாளர்கள் லாபம் ஈட்டியதால் இன்று பங்குச் சந்தை சரிந்து முடிந்தன.

மதிய நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 309.49 புள்ளிகள் சரிந்து 82,653.22 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 71.77 புள்ளிகள் சரிந்து 82,890.94 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 32.40 புள்ளிகள் குறைந்து 25,356.50 புள்ளிகளாக உள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் அதானி போர்ட்ஸ் 1.37 சதவிகிதம் சரிந்தது. அதைத் தொடர்ந்து ஐடிசி, பார்தி ஏர்டெல், என்டிபிசி, மாருதி, ஏசியன் பெயிண்ட்ஸ், சன் பார்மா, பவர் கிரிட், ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் லார்சன் & டூப்ரோ ஆகிய பங்குகளும் சரிந்து முடிந்தது.

இதற்கு நேர்மாறாக பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி, டாடா ஸ்டீல், ஆக்சிஸ் வங்கி மற்றும் டெக் மஹிந்திரா ஆகிய பங்குகள் உயர்ந்து முடிந்தது.

துறை சார்ந்த குறியீடுகளில் நிஃப்டி ரியாலிட்டி குறியீடானது 1.7 சதவிகிதம் உயர்ந்தது, நிஃப்டி மீடியா, 1.7 சதவிகிதமும், நிஃப்டி பொதுத்துறை வங்கிகள் 1.2 சதவிகிதமும் உயர்ந்த நிலையில் நிஃப்டி மெட்டல் & கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் 0.9 சதவிகிதம் அதிகரித்தது.

நிஃப்டி எஃப்எம்சிஜி குறியீடு 0.7 சதவிகிதம் குறைந்த நிலையில் அதைத் தொடர்ந்து நிஃப்டி ஹெல்த்கேர் 0.2 சதவிகிதம் சரிந்தது.

ஆசிய சந்தைகளில் டோக்கியோ மற்றும் ஷாங்காய் சரிந்து முடிந்தது. அதே நேரத்தில் சியோல் மற்றும் ஹாங்காங் உயர்ந்து முடிந்தது.

மத்திய நேர வர்த்தகத்தில் ஐரோப்பிய சந்தைகள் உயர்ந்து வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் நேற்று (வியாழக்கிழமை) லாபத்துடன் முடிவடைந்தது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வியாழக்கிழமை ரூ.7,695 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.03 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 72.71 ஆக உள்ளது.

Related posts

ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் மோடி!

அரிய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

ம.நீ.ம. தலைவராக மீண்டும் கமல்ஹாசன்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து