சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு: ஐடி துறை பங்குகள் உயர்வு!

இந்திய பங்குச்சந்தையில் வணிக நேர முடிவில், சென்செக்ஸ், நிஃப்டி இன்று (அக். 17) தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவுடன் முடிந்தது.

நிஃப்டி சரிந்து மீண்டும் 24 ஆயிரம் புள்ளிகளுக்குக் கீழ் சரிந்தது. சென்செக்ஸ் ஒட்டுமொத்தமாக 700 புள்ளிகள் வரை சரிந்தது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 494.75 புள்ளிகள் சரிந்து 81,006.61 புள்ளிகளாக நிலைப்பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.61% சரிவாகும்.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, 221.45 புள்ளிகள் குறைந்து 24,749.85 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.89% சரிவாகும்.

9 நிறுவனப் பங்குகள் மட்டுமே உயர்ந்தது

வணிக நேரத் தொடக்கத்தில் 81,758.07 புள்ளிகள் என்ற உயர்வுடன் தொடங்கிய சென்செக்ஸ், கிட்டத்தட்ட 800 புள்ளிகள் சரிந்து 80,905.64 புள்ளிகள் வரை சென்றது. எனினும் 81,781.40 வரை இன்றைய உச்சத்தை எட்டியது. வணிக நேர முடிவில் 494.75 புள்ளிகள் சரிந்து 81,006.61 புள்ளிகளாக சென்செக்ஸ் நிறைவு பெற்றது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 தரப் பங்குகளில் 9 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே ஏற்றத்துடன் காணப்பட்டன. எஞ்சிய 21 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் இருந்தன.

அதிகபட்சமாக இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்குகள் 2.50% வரை உயர்ந்திருந்தன. இதற்கு அடுத்தபடியாக டெக் மஹிந்திரா 2.34%, பவர் கிரிட் 1.21%, எல்&டி 1.07%, எஸ்பிஐ 0.70%, டிசிஎஸ் 0.35%, ரிலையன்ஸ் 0.18%, எச்.சி.எல். டெக் 0.14%, இந்தஸ்இந்த் வங்கி 0.08% உயர்ந்திருந்தன.

இதையும் படிக்க | புதிய உச்சத்தில் தங்கம் விலை! இன்று எவ்வளவு தெரியுமா?

இதேபோன்று நெஸ்ட்லே இந்தியா பங்குகள் அதிகபட்சமாக -3.40% வரை சரிந்தன. அடுத்தபடியாக எம்&எம் -3.38%, அல்ட்ராடெக் சிமெண்ட் -2.70%, பஜாஜ் ஃபின்சர்வ் -2.49%, டைட்டன் கம்பெனி -1.95%, மாருதி சுசூகி -1.94%, பாரதி ஏர்டெல் -1.90%, ஆக்சிஸ் வங்கி -1.86%, டாடா ஸ்டீல் -1.83% சரிவுடன் காணப்பட்டன.

இதேபோன்று வணிக நேரத் தொடக்கத்தில் 25,027.40 புள்ளிகளுடன் தொடங்கிய தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 24 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது. வணிக நேர முடிவுக்கு முன்பு வரை

24,971.30 புள்ளிகளாக இருந்த நிலையில், வணிக நேர முடிவில் 221.45 புள்ளிகள் சரிந்து 24,749.85 புள்ளிகளாக நிறைவு பெற்றது.

நிஃப்டி பட்டியலில் உள்ள 50 தரப் பங்குகளில் பஜாஜ் ஆட்டோ பங்குகள் -12.90% வரை சரிந்திருந்தது. ஹெவெல்ஸ் இந்தியா 6.90%, ஓபிராய் இந்தியா -6.25%, பிராமல் -6.17%, ஜேபி பவர் -5.92%, பிஎஸ்இ -5.85%, பிஎச்இஎல் -5.72% சரிவுடன் காணப்பட்டன.

Related posts

தூத்துக்குடி: கடல் அலையில் சிக்கி 2 பெண்கள் பலி!

கிருஷ்ணகிரி அருகே தீ விபத்து: தீயணைப்புத் துறை அலுவலர், அவரது தந்தை பலத்த காயம்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!