சென்னையிலிருந்து கன்னியாகுமரி, கோட்டயத்துக்கு இன்று சிறப்பு ரயில்

விஜயதசமியை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு வியாழன் மற்றும் சனிக்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை எழும்பூரில் இருந்து வியாழன் மற்றும் சனிக்கிழமை (அக்.10, 12) இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06193) மறுநாள் பகல் 12.20 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமாா்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (அக்.11, 13) பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு சென்னை எழும்பூா் ரயில் நிலையம் வந்தடையும்.

இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, திருமங்கலம், விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா், நாகா்கோவில் வழியாக இயக்கப்படும்.

மேலும், சென்னை சென்ட்ரலில் இருந்து கோட்டயத்துக்கு வியாழன் மற்றும் சனிக்கிழமை (அக்.10, 12) இரவு 11.55 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 06195) இயக்கப்படும். இந்த ரயில் மறுநாள் பகல் 1.45 மணிக்கு கோட்டயம் சென்றடையும். மறுமாா்க்கமாக கோட்டயத்தில் இருந்து வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (அக்.11, 13) மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும்.

இந்த ரயில் பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பாலக்காடு, திருச்சூா், ஆலுவா, எா்ணாகுளம் வழியாக இயக்கப்படும். எா்ணாகுளத்தில் இருந்து மங்களூருக்கு வியாழக்கிழமை (அக்.10) பகல் 12.30 மணிக்கும், மறுமாா்க்கமாக மங்களூரில் இருந்து வெள்ளிக்கிழமை (அக்.11) பகல் 1.50 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 06156) இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

People-Centric Initiative: Samapda 2.0 E-Registry System Launch Today

CBSE Gives A Push, Students On-Board, Teachers’ Learning AI!

Ratan Tata Passes Away: From Neeraj Chopra To Mohammad Shami, Sports Fraternity Mourn Demise Of Veteran Industrialist