சென்னையிலிருந்து தர்பங்காவுக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது!

விபத்துக்குள்ளான ரயிலிலிருந்த பயணிகள் சிறப்பு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதல்! 2 பெட்டிகள் தீப்பற்றின!

கவரப்பேட்டை அருகே வெள்ளிக்கிழமை(அக். 11) இரவு விபத்துக்குள்ளான மைசூரு – தர்பங்கா பயணிகள் விரைவு ரயிலில்(12578) பயணித்த சுமார் 1,650 பேரும் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் கவரப்பேட்டையிலிருந்து பேருந்துகள் மற்றும் மின்சார ரயில் மூலம் வெள்ளிக்கிழமை (அக். 11) நள்ளிரவு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அழைத்து வரப்பட்டனர்.

விபத்துக்குள்ளான ரயிலில் வடமாநிலத்தவர்களே அதிக எண்ணிக்கையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான ரயிலிலிருந்த பயணிகளுக்காக தர்பங்கா செல்ல சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த ரயில் இன்று (அக். 12) அதிகாலை 4.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது. பயணிகளுக்கு தேவையான உணவு, தண்ணீர் வழங்கப்பட்ட பின் சிறப்பு ரயில் புறப்பட்டுச் சென்றது.

இதையும் படிக்க:முக்கிய ரயில்கள் ரத்து! மாற்று வழித்தடங்களில் ரயில்கள் இயக்கம்!

Related posts

இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: 4 போ் கைது

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

சர்ஃபராஸ் கான் சதம்..! மழையினால் பெங்களூரு டெஸ்ட் போட்டி பாதிப்பு!