சென்னையில் கனமழை: பேருந்துப் போக்குவரத்தில் மாற்றம்

சென்னை: தமிழகத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், பேருந்துப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகரப் பேருந்துப் போக்குவரத்து அறிவித்துள்ளது.

அதிகளவில் மழை பெய்து, சாலைகளில் வெள்ளம் தேங்கியிருந்தால், அப்பகுதியில் பேருந்துகளை இயக்காமல், பாதியிலேயே பேருந்துகள் நிறுத்தும் வகையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

அதாவது, முதற்கட்டமாக, தாழ்தள பேருந்துகளுக்குள் மழைத் தண்ணீர் நுழைந்துவிடுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தண்ணீர் சூழ்ந்திருக்கும் பகுதிகளில் இயக்கப்படும் தாழ்தள பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க.. புயல் சின்னம் எங்கே கரையை கடக்கும்? அடுத்த 3 நாள்களுக்கான தகவல்!

அடுத்தது, அம்பத்தூர், ஆவடியிலிருந்து கிண்டி செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்துடன் நிறுத்தவும், தாம்பரத்திலிருந்து செங்குன்றம் செல்லும் பேருந்துகள் அம்பத்தூர் அல்லது அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பெரம்பூர் சுரங்கப்பாதை, முரசொலி மாறன், மேட்லி சுரங்கப் பாதை உள்ளிட்டப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

சுதந்திர தின பூங்கா முதல் நாகாஸ் வரை வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதாலும், பெரியார் சாலை – நெற்குன்றம் பகுதிகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஓஎம்ஆர், பெருங்குடி, கந்தன்சாவடி பகுதிகளிலும் மழை நீர் தேங்கியிருப்பதால் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் செல்லும் பயணிகள் 104சி, 104சிஎக்ஸ் தடத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது