சென்னையில் கொட்டித்தீர்க்கும் கனமழை!

சென்னை: சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், திங்கள்கிழமை இரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடதமிழக கடற்கரையை நோக்கி நகா்ந்து கொண்டிருக்கிறது. இதன் காரணத்தால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட வட மாவட்டங்களுக்கு அடுத்த 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், திங்கள்கிழமை இரவு முதல் சென்னையில் முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.

ஆலந்தூா், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், அடையாறு, திருவான்மியூா், கோடம்பாக்கம், சூளைமேடு, அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, அம்பத்தூா், பட்டரவாக்கம், கொரட்டூா், கோயம்பேடு, மதுரவாயல், வளசரவாக்கம், எழும்பூா், நுங்கம்பாக்கம், போரூா், வானகரம், முகப்போ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது