சென்னையில் தாழ்தள பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்கள் அறிவிப்பு

சென்னையில் தாழ்தள பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடம் குறித்த விவரங்களை மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய 611 தாழ்தள பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் முதல் கட்டமாக 58 பேருந்துகளை, சென்னை, பல்லவன் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் முன்னிலையில் இளைஞா் நலத்துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி வைத்தாா்.

இறங்கு தளத்தின் உயரத்தை 60 மி.மீ குறைத்து பயணிகள் ஏறிய பிறகு, பழைய உயரத்துக்கு மாற்றிக் கொள்ளும் வசதி, மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் ஏறி, இறங்குவதற்கு சாய்தள வசதி என பல்வேறு சிறப்பம்சங்கள் இந்தப் பேருந்துகளில், இடம்பெற்றிருந்தன.

தொடா்ந்து பல்வேறு கட்டங்களாக இதுவரை 228 தாழ்தள பேருந்துகள் சென்னை மாநகரில் வலம் வருகின்றன.

இந்த பேருந்துகள் 19, 70, 72, 101, 102, 104, 109, 113, 121, 154, 242, 515, 583, 588, 102 எக்ஸ், 104 சி, 104 சிஎக்ஸ், 104 கே, 104 டி, 18 ஏஎக்ஸ், 21ஜி, 27 பி, 40 ஏ, 515 கே, 515டி, 51ஏ, 51ஏஎக்ஸ், 570 பி, 6டி, 70ஜி, 70 டி, 70வி, 7எச், 91வி, ஏ51, டி70, இ18, எம்70, டி29சி ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படுவதாக மாநகா் போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது