சென்னையின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை(நவ.7) காலை முதல் விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையின் நுங்கம்பாக்கம் அமைந்தகரை, கோயம்பேடு, தியாகராய நகர், மாம்பலம், கோடம்பாக்கம், வளசரவாக்கம், வடபழனி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணத்தால், வியாழக்கிழமை (நவ.7) முதல் அக்.12 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவ.7-இல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
இதையும் படிக்க |தொழிலதிபா் மனைவியிடம் ரூ. 10 கோடி ஆன்லைன் மோசடி: இருவா் கைது
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் நவ.7,8-ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, சென்னையின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை(நவ.7) காலை முதல் விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை அம்பத்தூர், அண்ணாநகர், வடபழனி, கிண்டி, நுங்கம்பாக்கம், வளசரவாக்கம், கோடம்பாக்கம், தியாகராய நகர் உள்ளிட்ட சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.