சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை

தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும்.என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது .

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலையில்,சென்னையில் பல்வேறு இடங்களில் தற்போது மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை எழும்பூர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, ஆலந்தூர், அசோக் நகர், குரோம்பேட்டை, தாம்பரம், அம்பத்தூர், ராமாபுரம், விருகம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்கிறது.

தொடர்ந்து வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது மழை பெய்துள்ளதால், சென்னையில் தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

Related posts

திருப்பதி பிரம்மோற்சவம் : தமிழகத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

மறைந்த பாடகர் எஸ்.பி.பி பெயரில் சாலை – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

செய்திகள் சில வரிகளில்……